இடுப்பு வலி வராமல் தடுக்கும் முதுகுத்தண்டு முத்திரை

முதுகுத்தண்டு சார்ந்த நோய்களும் இடுப்பு மற்றும் முதுகு வலியை சரிசெய்ய முதுகுத்தண்டு முத்திரை உதவும்.

செய்முறை :

வலது கை: கட்டை விரல் நுனியுடன் சுண்டு விரல் மற்றும் நடு விரல் நுனிகளைச் சேர்த்துவைக்க வேண்டும். ஆள்காட்டி விரல் மற்றும் மோதிர விரல் நீட்டி இருக்க வேண்டும்.

இடது கை: கட்டை விரலின் நடுரேகையில் ஆள்காட்டி விரலின் நகப்பகுதியைவைத்து, கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.

தரையில் சப்பளமிட்டு அமர்ந்தோ, தரையில் காலை ஊன்றியபடி நாற்காலியில் அமர்ந்தோ, 10-15 நிமிடங்கள் வரை இந்த முத்திரையைச் செய்யலாம். ஒரு நாளைக்கு 3 முதல் 5 முறை செய்வது நல்லது.

பலன்கள் :

உட்கார்ந்தே வேலை செய்வோர் ஐந்து நிமிடங்கள் இந்த முத்திரையைச் செய்ய இடுப்பு வலி குறையும். மேலும், இடுப்பு வலி வராமல் தடுக்கலாம். முதுகுவலிக்கு இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்துவர, சிறந்த பலன் கிடைக்கும். முதுகில் ஏற்படும் தசைப்பிடிப்பு, உச்சந்தலையில் பிடிப்பது போன்ற வலி, இடுப்பு வலி சரியாகும். பெண்களுக்கு, இடுப்பு எலும்புத்தசை பலப்படவும், பிரசவத்துக்கு பின்னர், இடுப்பு எலும்புகள் நல்ல நிலைக்குத் திரும்பவும் இந்த முத்திரையைச் செய்யலாம்.