தினமும் காலையில் பிரட் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

Female Friends Enjoying Tea And Cake At Home

இன்றைய பரபரப்பான காலத்தில் பலரும் பெரும்பாலும் காலை வேளையில் பிரட்டை தான் காலை உணவாக சாப்பிடுவார்கள். ஆனால் இந்த பிரட்டை தினமும் காலையில் உட்கொண்டு வந்தால், அதனால் உடல் ஆரோக்கியம் கெட்டுப் போகும். வெள்ளை பிரட் சுவையாக இருக்கலாம்.

ஆனால் அது சுத்திகரிக்கப்பட்ட மாவினால் அதாவது மைதாவால் தயாரிக்கப்படுவதால், அதில் எந்த ஒரு சத்துக்களும் இருக்காது. அப்படி சத்துக்களே இல்லாத பிரட்டை உட்கொள்ளும் போது, அதனால் உடல்நிலை தான் மோசமாகும். உடலுக்கு எந்தவித சத்தும் கிடைக்கப்போவதில்லை. தினமும் காலையில் வெள்ளை பிரட்டை சாப்பிட்டு வந்தால், அதனால் உங்கள் உடல் எடை அதிகரிக்கக்கூடும். ஏனெனில் வெள்ளை பிரட்டானது பசியை அதிகரிக்கும்.

வெள்ளை பிரட் இரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கும். இப்படியே தினமும் உட்கொண்டு வந்தால், அதனால் நாளடைவில் நீரிழிவால் பாதிக்கப்படக்கூடும். சிலருக்கு பிரட் உட்கொண்ட பின் மலச்சிக்கல் ஏற்படக்கூடும். ஏனெனில் வெள்ளை பிரட்டில் நார்ச்சத்து ஏதும் இல்லை. இப்படி நார்ச்சத்து குறைவாக இருப்பதை காலையில் உட்கொண்டால், குடலில் நீர்த்தேக்கம் இல்லாமல் கழிவுகள் இறுக்கமடைந்து வெளியேற முடியாமல் இருக்கும்.

நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால் வெள்ளை பிரட்டில் நார்ச்சத்து இல்லாததால், உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, உயர் இரத்த அழுத்தம், இதய பிரச்சனைகளுக்கு உள்ளாகக்கூடும். வெள்ளை பிரட்டில் சத்துக்கள் ஏதும் இல்லாததால், அவற்றை உட்கொள்வதன் மூலம் பசி முற்றிலும் அடங்காது.