இன்றைய இளம் தலைமுறையினர் படுக்கையில் தோல்வியுறுவது ஏன்?

தற்போதைய தலைமுறையினரிடம், வாழ்வியல் சார்ந்து நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம் இவர்களது வாழ்வியலில் ஏற்பட்டிருக்கும் வேகம், சூழ்நிலை, வேலைப்பாடுகள் போன்றவற்றை குறிப்பிடலாம். இதனால் வசதி வாய்ப்புகள் அதிகரித்தது என்று மகிழ்ந்தாலும், வாழ்க்கையின் அடிப்படையான இல்லறம் பாதித்திருக்கிறது என்பது தான் கசப்பான உண்மை.
அதிலும், இளம்தலைமுறையினர் தான் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய இளம் ஆண் – பெண் பலரால் இல்லற வாழ்க்கையில் சிறந்து ஈடுபட முடிவதில்லையாம். அதற்கான காரணங்கள்…

* பெரும்பாலான இளம் ஆண் – பெண்கள் வேலையைக் காரணம் காட்டியும், வெளிநாட்டு உணவுப் பழக்கம் என்ற பெயரிலும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதில்லை. தாம்பத்திய உறவில் இன்றைய தலைமுறையினர் தோல்வியுறுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

* இளம் வயதிலேயே அதிகமாக இன்றைய தலைமுறையினர் மது, புகை மற்றும் போதை பொருட்களை பயன்படுத்த தொடங்குகிறார்கள். இதற்கு எம்.என்.சி. போன்ற பெரும் நிறுவனங்களில் கை நிறைய இவர்கள் வாங்கும் சம்பளமும் ஓர் காரணம். இளம் வயதிலேயே அளவுக்கு அதிகமாக இவற்றை இவர்கள் உட்கொள்வதால், இவர்களது தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

* அளவுக்கு அதிகமான வேலைப்பளு, மல்டி-டாஸ்கிங் என்ற பெயரில் நால்வர் செய்யும் வேலையை ஒருவரே செய்வது போன்றவை, இன்றைய இளம் தலைமுறையினர் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதிகரிக்கும் மன அழுத்தம் காரணமாக படுக்கையில் இவர்களால் சரியாக செயல்பட முடிவதில்லை என கூறுகிறார்கள்.

* தற்போதைய ஸ்மார்ட் போன் போன்ற அதிநவீன சாதனங்கள் மற்றும் சமூக இணையத்தில் மூழ்கியிருப்பது போன்றவை கூட இன்றைய இளம் தலைமுறையினரின் உடல்நலத்தை வெகுவாக பாதிக்கிறது. முக்கியமாக, கழுத்தை தொங்க வைத்தப்படி அல்லது ஒரே நிலையில் பல மணிநேரம் படுத்து / அமர்ந்திருப்பது உங்கள் உடலில் இருக்கும் பெரும்பாலான பாகங்களின் செயல்பாட்டுத் திறனை குறைத்துவிடுகிறது.

* இன்றைய தினத்தில், இணையத்தில் இருந்து மிக ஏதுவாக வாட்ஸ்-அப்-க்கு கைமாறிவிட்டது ஆபாசப் படங்கள். இதனால், ஆபாசப்படம் பார்ப்பது அதிகரித்துவிட்டது. இதனால் இரண்டு விஷயங்கள் பாதிக்கப்படுகிறது. எதிர்பார்ப்பு அதிகரித்து (உடல் அழகு) நிஜத்தில் நடக்கும் உடலுறவு இவர்களுக்கு அலுத்துவிடுகிறது. மற்றொன்று காதல் வாழ்க்கையை முற்றிலுமாக இது பாதித்துவிடுகிறது.