மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்கும் இயற்கை உணவுகள்

உடலில் உள்ள ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகும். இதனால் உடலின் அடிப்படை சக்தியான ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும்.

* இயற்கை உணவு மூலம் ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். பீட்ரூட் சாப்பிட்டு வந்தால், புதிய ரத்தம் ஊறும். செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வெட்டை சூடு தீர்ந்து ரத்தம் விருத்தியாகும்.

* முருங்கை கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டுக் கிளறி, நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும். நாவல் பழத்தினை தினமும் சாப்பிட்டால் கூட ரத்தம் விருத்தியாகும்.

* இஞ்சி சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால், ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் கூட ரத்தத்தை சுத்தமாக்கும். ஆனால் வாதநோய் உள்ளவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது. இலந்தைப்பழம் ரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமின்றி சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதோடு, பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

* இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது ரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாக தவிர்த்து விடலாம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால், இது ஏற்படாமல் தவிர்க்கலாம்.

* கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை ஊறவைத்து குடித்து வந்தால் போதும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம் என்கிறது, இயற்கை வைத்தியம். ஒரு தம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டாலும் ரத்த அழுத்தம் சீர்படும்.

* இதுதவிர அகத்திக்கீரையை வாரம் 2 தடவை சாப்பிட்டு வந்தாலும் ரத்தக் கொதிப்பு கட்டுப்படும். ரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் பற்று போட்டால் சரியாகிவிடும். விளாம்பழம் ரத்தத்தில் உள்ள கிருமிகளை அழிக்கும்.

– இப்படி ஏராளமான மருந்துகளை இயற்கை உணவு தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றை முறையாக அளவாக சாப்பிட்டாலே மருத்துவமனைகளுக்குச் செல்வதை தவிர்த்து விடலாம்.