தொப்பையை குறைக்க சூப்பரான பயிற்சி

இன்றைய காலகட்டத்தில் கணனி முன் அமர்ந்து கொண்டு வேலை பார்ப்பவர்களே ஏராளம்.

குறைந்தது 7- 8 மணிநேரமாவது தொடர்ந்து அமர்ந்து கொண்டே வேலை செய்வதால் பல்வேறு உடல் நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இதில் குறிப்பாக சொல்லப் போனால் கழுத்து வலி, முதுகு வலி, வயிறு சம்மந்தப்பட்ட பிரச்னைகள், கண் சார்ந்த பிரச்னைகள் என இப்படி அடுக்கி கொண்டு போகலாம்.

இந்த வலிகளை குணப்படுத்த வலி நிவாரணை மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் அது ஆபத்தில் தான் முடியும்.

எனவே எளிமையான உடற்பயிற்சியின் மூலம் இதிலிருந்து விடுபடலாம்.

எப்படி செய்வது?

முதலில் விரிப்பில் பத்மாசனத்தில் அமர்ந்த பின் கைகளை பின்னே (முதுகு பக்கம்) மடித்து, வலது கை, இடது காலின் பெருவிரலையும், இடது கை வலது காலின் பெருவிரலையும் தொடுமாறு பார்த்துக் கொண்டு, மூச்சை வெளியே விட்டவாறு குனிந்து, மூக்கு அல்லது வாயால் தரையைத் தொட வேண்டும்.

இப்படி இந்த நிலையில் 30 வினாடிகள் இருந்த பின்னர் மூச்சை உள்ளே இழுத்தவாறு எழ வேண்டும். இப்படி தினமும் 5 முதல் 7 முறை செய்து வர வேண்டும்.

இந்த ஆசனத்தில் ஆரம்ப காலத்தில், கைகளை பின்புறம் கட்டியவாறு குனிந்து இந்த ஆசனத்தை செய்யலாம்.

ஆரம்ப காலத்தில் செய்யும் போது மிகவும் கஷ்டமாக இருக்கும். தொடர்ந்து முயற்சி செய்து வந்தால் எளிதாக செய்ய முடியும்.

பயன்கள்

தொடர்ந்து செய்து வருவதன் மூலம் முதுகுத் தண்டுவடத்தில் நல்ல வளைவு ஏற்படுவதோடு முதுகு வலி வருவது தடுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தண்டுவடத்திலிருந்து உடலுக்கு செல்லும் நரம்புகள் வலுப்பெறுகிறது.

முக்கியமாக வயிற்றுப் பகுதி அதிகம் அழுத்தப்படுவதால், வயிற்றைச் சுற்றி தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, தொப்பை விரைவில் குறையும்.

நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைப்பதோடு, அதனால் ஏற்படும் வேறு பல பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.